நான் ஒரு புறம்போக்கு, பரதேசி: நித்யானந்தா

நித்யானந்தா தன்னை புறம்போக்கு, பரதேசி என அழைத்துக்கொண்டு அதற்கு புதிய விளக்கத்தையும் அளித்துள்ளார்.


குழந்தை கடத்தில், பாலியல் துன்புறுத்தல் என பல குற்றச்சாட்டுகளில் காவல்துறையினர் நித்யானந்தாவைத் தேடிவர அவரோ எந்தவித பதற்றமுமில்லாமல் வீடியோ வெளியிட்டுவருகிறார்.


நேற்று வெளியிட்ட வீடியோவில் தனக்கு எதிராக சர்வதேச சதி உள்ளது என்று கூறியுள்ளார். “சர்வதேச மாஃபியா என்னை தாக்க முயற்சிக்கிறது.


பல்வேறு கட்டங்களில் திட்டமிடப்பட்ட தாக்குதல் என் மீதும் என் சங்கத்தின் மீதும் தொடுக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு யூகங்கள் வகுக்கப்படுவதும் பணம் வாரி இறைக்கப்படுவதும் தொடர்கிறது.


இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் எனக்கு எதிரான அனைத்து செயல்களும் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச சமூகம் கவனித்து வருகிறது. என்னையும் எனது சங்கத்தையும் கடவுளே நேரடியாக களமிறங்கி காத்துவருகிறார்” என்று நித்யானந்தா கூறினார்