வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி!

நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்று அகமதாபாத் காவல் துறை திணறி வரும் நிலையில் தனக்கென்று கைலாஸ் என்ற பெயரில் ஒரு நாட்டை அமைத்து சட்டத்தை இயற்றி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது


இந்த செய்தி தற்போது இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது. தனது நாட்டுக்கு என்று தனி இணையத்தையும் உருவாக்கி இருக்கிறார். அதில், தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.


தனது இணையதளங்கள் மூலம் நன்கொடையும் கோரி வருகிறார். அவரது நாடான 'கிரேட்டஸ்ட் இந்து நேஷன்' நாட்டில் குடியேறுவதற்கு குடியுரிமையும் வழங்கப்படுகிறது. பனாமாவில் தனது இணையதளத்தை பதிவு செய்து இருக்கிறார். இதன் ஐபி அடையாளம் அமெரிக்காவின் டல்லாஸ் என்று காட்டுகிறது.