இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை 4 நாட்கள் பொங்கல் பரிசை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்

இந்நிலையில் இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை 4 நாட்கள் பொங்கல் பரிசை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும்.

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் வரும் 13ஆம் தேதி பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு வழங்குவதற்கு நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.